மானாமதுரை:மானாமதுரையில் விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய இடத்தில் உள்ள நினைவு ஸ்துாபியில் விவேகானந்தர் நினைவு நாளை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்குப்புசாமி, மாரிமுத்து முன்னிலையில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பா.ஜ.,மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய தலைவர் சங்கரசுப்பிரமணியன்,துணை தலைர் வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.