பதிவு செய்த நாள்
10
ஜூலை
2020
01:07
திருச்சி: பருவ மழையால் நீர்நிலைகள் நிரம்பவும், கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும் கிராமங்கள்தோறும், கோ பூஜை நடத்த வேண்டும் என்று, பாரதிய கிசான் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க தென்பாரத அமைப்பு செயலர் ஸ்ரீகணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்ப, பருவமழை வேண்டியும், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், பாரதிய கிசான் சங்கம் சார்பில், கிராம அளவில் கோ பூஜைகளை நிர்வாகிகள், சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளின்படி நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய நடவடிக்கையின்படி, தமிழக மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.