திருவாடானை: தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி இடையான்வயல் கிராமத்தில் ராமர் பாதம் கோயில் உள்ளது. சீதையை தேடி ராமர் சென்றபோது இங்கு தங்கியதாக கிராம மக்கள் நம்புகிறார்கள். பாழடைந்துள்ள இக்கோயிலை புதுப்பிக்க ஊரக வளர்ச்சிதுறை மற்றும் சுற்றுலாதுறை சார்பில் ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோயிலை சுற்றியுள்ள சீமைகருவேல மரங்கள் ஊராட்சி சார்பில் அகற்றப்பட்டு வருகிறது.