தேவநல்லூர் ஸ்ரீவர மங்கையம்மன் கோயிலில் இன்று கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 10:05
திருநெல்வேலி : களக்காடு அருகேயுள்ள தேவநல்லூர் ஸ்ரீவர மங்கையம்மன் கோயிலில் கொடை விழா இன்று (15ம் தேதி) நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு குடியழைப்பு, மாக்காப்பு தீபாராதனை, மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தல், பிற்பகல் 12 மணிக்கு மகா கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு கரம் எடுத்தல், இரவு 10 மணிக்கு கரகாட்டம் கிராமிய கலை நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீவர மங்கையம்மன் சப்பர பவனியும் நடக்கிறது. 16ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார் செய்துள்ளனர்.