பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
உடன்குடி : உடன்குடி அருகே வலசைகிணறு திரிபுரசுந்தரி அம்மன், முத்தாரம்மன் கோயில் கொடை விழா நாளை (14ம் தேதி) கும்பாபிஷேகத்துடன் துவங்குகிறது. வலசைகிணறு திரிபுரசுந்தரி அம்மன், முத்தாரம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயில் கொடைவிழா நாளை காலை 11 மணிக்கு கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்துடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு மகுடம், இரவு 8 மணிக்கு கும்பம் ஏற்றுதல், மாகாப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும், இரவு 9 மணிக்கு வில்லிசையும், வரும் 15ம் தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தல், காலை 9 மணிக்கு வில்லிசை, காலை 10 மணிக்கு சிறப்புமேளம், நேர்த்திகடன் செலுத்துதல், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சிறப்பு மகுடமும், மாலை 6மணிக்கு நையாண்டி மேளமும், பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு வில்லிசையும், இரவு 9 மணிக்கு மது பொங்கலிடுதல், இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.