பதிவு செய்த நாள்
19
ஜூலை
2020
03:07
சென்னை : கோவில் திருவிழாக்களை, தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்களின்படி, மாறுதல் எதுவுமின்றி, கோவில் வளாகத்திற்குள் நடத்த வேண்டும் என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அன்றாடம் நடக்கும் பூஜைகள் மட்டுமின்றி, திருவிழாக்கள் நடப்பதும் இன்றியமையாதது. ஒவ்வொரு கோவிலுக்கும், குறிப்பிட்ட திருவிழாக்கள், சிறப்புடையதாகவும், பக்தர்கள் அதிக அளவில் வந்து, சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது.அறிவுரைகள்கொரோனா காரணமாக, பொது மக்கள் நலனை முன்னிட்டு, கோவில்களில் பக்தர்கள் இதுநாள் வரை, தரிசனத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.
ஆனால், தினசரி பூஜைகள் மட்டும், அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் வாயிலாக, தடையின்றி நடந்து வருகின்றன.தற்போது, அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி, கிராம பகுதிகளில் உள்ள கோவில்களில், பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில்களில் நடக்க வேண்டிய விழாக்களுக்கு, தலைமையிடத்து அனுமதி கோரியும், உற்சவ திருவிழா நிகழ்வுகளை, யு டியூப் சேனலில் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டியும், சார்நிலை அலுவலர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
நேரடி ஒளிபரப்பு: இதற்காக, சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.அவற்றின் விபரம்:l கோவில்களில் பழக்க வழக்கப்படி நடக்கும் திருவிழாக்களுக்கு, தலைமையிடத்தின் அனுமதி பெற வேண்டியதில்லைl திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைப் பிடிக்கப்பட்டு வரும், பழக்க வழக்கங்கள்படி மாறுதல் ஏதுமின்றி, கோவில் வளாகத்திற்குள் நடைபெற வேண்டும்l கோவில்களில் சொற்ப அளவிலான, கோவில் பணியாளர்களை வைத்து, முக கவசம் அணிந்து, ஆறு அடி சமூக இடைவெளி கடைப்பிடித்து, திருவிழாக்கள் நடக்க வேண்டும். விழாக்களில், உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லைl கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள, அரசால் வழங்கப்பட்டுள்ள, அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும், கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெற வேண்டியிருந்தால், அந்த அனுமதியை பெற்று, திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்l இவ்விழாக்களை, பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து காணும் வகையில், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.