மதுரை, மேலுார் எட்டிமங்கலம் வழக்கறிஞர் ஸ்டாலின். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா 10 நாட்கள் நடக்கும். முழு பவுர்ணமியன்று தேரோட்டம் நடைபெறும். தென் மாவட்ட பக்தர்கள் பங்கேற்பர். நம்பிக்கையுடன் விவசாயப் பணியை துவக்குவர்.144 தடையுத்தரவால் இக்கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிராம சிறு கோயில்களை திறக்க அரசு தளர்வளித்துள்ளது.ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையை 500 பக்தர்களுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இம்முறை கொரோனா ஊரடங்கால், கள்ளழகர் கோயில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் துவக்கவில்லை. ஆடித்தேரோட்டம் நடத்தக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விரைவில் விசாரணைக்கு வரும்.