சபரிமலை நடை இன்று அடைப்பு: ஆக.9ல் நிறை புத்தரிசி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2020 10:07
சபரிமலை : சபரிமலையில் ஜூலை 16 முதல் ஆடி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பூஜைகள் இன்று (ஜூலை 20) நிறைவுபெற்று இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
நிறை புத்தரிசி பூஜை ஆக.,9ல் நடக்கிறது.இதற்காக ஆக., எட்டாம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். ஆக., ஒன்பதாம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிேஷகம் நடக்கும். காலை 5:50 மணி முதல் 6:20க்குள் முகூர்த்தத்தில் நிறைபுத்திரிசி பூஜை நடைபெறும். தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் அறுவடையான நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு கோயில் சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். அன்று இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16ல் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.