விருத்தாசலம்; சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம், அருகம்புல், வில்வமாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.ேசத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கல்யாணசுந்தரி ஸ்ரீகதம்பவனேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் தீபாராதனை நடந்தது. முன்னதாக நந்திக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஸ்ரீகதம்பவனேஸ்வரருக்கும் சிறப்பு அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.