பதிவு செய்த நாள்
20
ஜூலை
2020
10:07
கோவை: முருகப்பெருமானை இழிவுபடுத்திய, கருப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 9, மாலை, 6:00 மணிக்கு, வீதிகளில், ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என, கோவை, சிரவணபுரம், கவுமார மடாலய மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் அடையாளம் கோபுரங்களும், கோவில்களும் தான். தமிழ் மண்ணின் அடையாளம், நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த தமிழும் ஆன்மிகமே. கடந்த, 80 ஆண்டுகளாக தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் திராவிடம் என்ற போர்வையில், இழிவுபடுத்தி வருகின்றனர். விநாயகர், ஆண்டாள், கிருஷ்ணரை தொடர்ந்து, தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தியுள்ளனர். கருப்பர் கூட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்தும், நம் கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையிலும், ஆகஸ்ட் 9, மாலை, 6:00 மணிக்கு, சமூக இடைவெளியில் நின்று, கந்த சஷ்டி கவசத்தை, ஒன்று கூடி பாடுவோம். இறை நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் வசிக்கும் வீதிகளில், சமூக நல்லிணக்கத்துடன், பங்கேற்போம். முருகப்பெருமானின் வேலை வணங்கி பூஜை செய்வோம். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும், தொலைபேசியில் பேசும்போதும், வணக்கம் என்ற வார்த்தைக்கு பதில், வெற்றிவேல் வீரவேல் என்று அழைப்போம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.