நீண்ட நாட்களுக்கு பிறகு கிராம கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2020 06:07
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள சுவாமி கோவில்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சமூக இடைவெளியுடன் சிறப்பு தரிசனத்தில் மக்கள் தரிசனம் செய்தனர்.
ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு தம்பிக்கலையசுவாமி கோவில் பிரதி வாரம் திங்கள், வெள்ளி மற்றும் பிரதி மாதம் அமாவாசை நாட்களில் தொடர்ந்து பூஜை நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களை அனுமதிக்காமல், கோவிலுக்குள் மட்டுமே பூஜை நடந்தது. தற்போது இந்து சமய அறநிலைத்துறை மூலம் கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள கோவில்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு வந்ததை தொடர்ந்து பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்ததனர். கோவிலில் காலை 9 மணியளவில் சிறப்பு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது.பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போன்று வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், ஏரி மொண்டிக்கருப்பணசாமி கோவில், ஆனைமேல் அழகியம்மன் கோவில்,ஒளித்தோட்ட கருப்பனசாமி, உட்பட கிராம பகுதிகளில் உள்ள அணைத்து கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு சிறப்பாக நடந்தது.