ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளான நேற்று பெரியாழ்வார் மங்களாசாசனம் பக்தர்களின்றி நடந்தது.
இதை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு கோயில் பிரகாரத்தில் பெரியபெருமாள், காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்களுக்கும், ஆண்டாள், ரெங்கமன்னாருக்கும் பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்தார். பூஜைகளை வாசுதேவ பட்டர் செய்தார். இரவில் ஐந்து கருடசேவையும் நடந்தது. சடகோபராமானுஜ ஜீயர், தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.