கோவை: சோமவதி அமாவாசையை முன்னிட்டு, கோவை ஈஷா மையத்தில் கால பைரவர் மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த மண்டபம், ஈஷா மையத்தின் நுழைவாயிலான மலைவாசல் அருகில் அமைய உள்ளது. ஈஷா நிறுவனர் சத்குரு கூறியதாவது:இங்கு சக்தி வாய்ந்த கால பைரவருக்குரிய, வீரியமான பிந்து, ஜூலை 18ல் நிறுவப்பட்டது. இந்த செயல்முறை நிறைவடைய, 4,356 நாட்கள் ஆகும். இது 2032 ஜூன் 21ல் முடிவடையும். ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குள், மூர்த்தி நிறுவப்பட்டு விடுவார்.அதற்கு முன்னதாகவே, மண்டப கட்டுமானப் பணி நிறைவடையும். காலபைரவர் பிரதிஷ்டை முழுமையடையும்போது, 25 ஆண்டு ஈஷா பிரதிஷ்டைகளும் முழுமை அடையும்.இவ்வாறு, சத்குரு கூறினார்.