பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் வென்னிமலை கோயிலில் கட்டளை பூஜை நடந்தது. பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாதாந்திர கடைசி வெள்ளி கட்டளை பூஜை நடந்தது. 11 அபிஷேகங்களுடன் சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. செல்வவிநாயகருக்கும், சுவாமி, அம்பாளுக்கும் அபிஷேகம் நடந்தது. தீர்த்தம், விபூதி, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. தீபாராதனையுடன் கட்டளை பூஜை நிறைவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை அருணாப்பேரி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.