திருமழிசை: பெருமாள் கோவிலில் கருட சேவை விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.திருமழிசை செண்பகவள்ளி உடனுறை வீற்றிருந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, உற்சவர் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாளான நேற்று கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏழாம் நாளான, 18ம் தேதி தேர்த் திருவிழாவும், 22ம் தேதி காலை, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.