வைகுண்டத்தில் விஷ்ணுவுக்கு தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர் கருடன். விஷ்ணுவின் வாகனமாக இவர் திகழ்வதால் ‘விஷ்ணு ரதம்’ என அழைப்பர். பெருமாள் கோயிலில் கருவறை எதிரில் இருக்கும் இவரை தரிசித்து அனுமதி பெற்ற பின்னரே சுவாமியை வணங்கச் செல்ல வேண்டும். கருடன் வானில் வட்டமிடுவதைக் காண்பது நல்ல சகுனத்தின் அறிகுறி. பழுப்பு நிறமும், கழுத்தில் வெண்மையும் கொண்ட இதைக் காண்பவர்கள் பெருமாளே பவனி வருவதாக எண்ணி, ‘கிருஷ்ணா கோவிந்தா’ என்று சொல்லி வழிபடுவர்.