ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று கருட ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். பறவைகளின் அரசனான கருடனுக்கு ‘பட்சி ராஜன்’ என்று சிறப்பு பெயருண்டு. வினதையின் மகன் என்பதால் ‘வைநதேயன்’ என்றும் அழைப்பர். கருட ஜெயந்தியன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை நீங்கும். பெண்கள் கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். விவசாயிகள் விஷ பூச்சிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இவரை வழிபடுவர்.