ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவை தொடர்ந்து வளாகத்திற்குள் பக்தர்களின்றி தங்கதேரில் ஆண்டாள் ,ரங்கமன்னார் எழுந்தருள திருத்தேரோட்டம் நடந்தது.
அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்க நித்தியபடி பூஜைகள், திருமஞ்சனம் நடந்தது. கள்ளழகர் கோயில் பரிவட்டம் சாற்ற 6:20 மணிக்கு தேரில் ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அனிரூத் கோவிந்தராஜ் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். காலை 8:05 மணிக்கு பட்டர்கள் வடம் பிடித்து இழுக்க கோயில் உள்பிரகாரம் வழியாக தேர் 20 நிமிடத்தில் நிலையை அடைந்தது. சடகோப ராமானுஜ ஜீயர், கலெக்டர் கண்ணன், தென்மண்டல ஐ.ஜி., முருகன், எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தக்கார் ரவிசந்திரன், இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.