Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பவுர்ணமி கருட சேவை: ... இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
11:08

சென்னை; அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, பஞ்சவடியில் உள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நாளை சிறப்பு திருமஞ்சனம் நடக்க உள்ளது.

திண்டிவனம்- - புதுச்சேரி சாலையில், பஞ்சவடி தலத்தில் அமைந்துள்ளது, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வகித்து வருகிறது.இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சொர்ண ஸ்ரீராம பாதுகையானது மிகவும் சிறப்பு பெற்றது.

பல திவ்ய தலங்களில், மங்களா சாசனமும், அயோத்தியில் உள்ள சரயு நதியில், திருமஞ்சனம் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. உலக நன்மைக்காக, சொர்ண ஸ்ரீராம பாதுகைக்கு, தினசரி சகஸ்ரநாம அர்ச்சனையும் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நாளை நடக்க உள்ளது. அப்பணிகள் சிறப்பாக துவங்கி, மகா சம்ரோக்ஷணம் நடக்க வேண்டி, பஞ்சவடியில் நாளை காலை, 8:00 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், கான்பூர் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால், விசேஷ திருமஞ்சனம் நடக்க உள்ளது.திருமஞ்சனம் கோவில் ஸ்தல பட்டர் ரங்கராஜ், வாசுதேவ பட்டாச்சாரியர்கள் தலைமையில் நடக்க உள்ளது. திருமஞ்சனத்தில், பக்தர்கள் பங்கேற்க முடியாததால், அவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து, பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என, டிரஸ்ட் தலைவரும், அறங்காவலருமான கோதண்டராமன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar