Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு ... கோதண்டபாணி கோவிலில் விளக்கு பூஜை கோதண்டபாணி கோவிலில் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
12:08

ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாப்பு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாப்பு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், ஒட்டுமொத்த உலகுக்கும் சொந்தமானவர் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 5 கோடி ரூபாய் நிதி அளிக்க விரும்புவதாக தெரிவித்த மொராரி பாப்பு, உலகம் முழுவதும் உள்ள, தன் ஆதரவாளர்களிடம், நிதி திரட்ட துவங்கினார். இந்தியாவில் இருந்து, 11.30 கோடி ரூபாய் நிதி திரண்டது. அதை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கி கணக்கில், நேற்று ஒப்படைத்தார். மேலும், ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் இருந்து, 3.21 கோடி ரூபாயும், அமெரிக்கா, கனடா மற்றும் இதர நாடுகளில் இருந்து, 4.10 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது.வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கான முறையான அனுமதி கிடைத்த பிறகு, அந்த தொகை, அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar