பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, ஏழு ராமர் கோவில்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்துார், திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில் உள்ள, ராமர் கோவில்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதன்படி, ஆரணி, ராமாபுரம், பங்காரப்பேட்டை, அத்திப்பட்டு, பாதிரிவேடு, பாகல்மேடு மற்றும் ராமன் கோவில் கிராமம் ஆகிய பகுதிகள் உட்பட, ஏழு இடங்களில் உள்ள ராமர் கோவிலுக்கு, இரண்டு போலீசார் வீதம், எஸ்.பி., அரவிந்தன்உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. - நமது நிருபர் -