சரவணம்பட்டி:உலகநலன் வேண்டி, உலகம் முழுவதும் கந்த சஷ்டி கவசம் என்ற முகநுால் வழி பாராயணத்தை சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம் இணைந்து நடத்துகின்றன.வரும் 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனைவரும், அவரவர் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டு, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். பேரூர் ஆதினம் சாந்தலிங்கர் திருமடத்திலும், சிரவை கவுமார மடாலயத்திலும், இந்த வழிபாடுகள் துவங்குகின்றன.