இதென்ன அதிசயம்! தேய்பிறை எட்டாம் நாளில் கிருஷ்ணர் பிறந்தாரே! அந்நாளில் எப்படி பவுர்ணமி தோன்ற முடியும்? இதற்கான விளக்கம் தருகிறது கமானிக்யா என்ற ஜோதிட நுால். அன்று வானமண்டலத்தில் எல்லா கிரகங்களும் பூரண சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிலா அன்று பவுர்ணமி போல பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தி தெய்வாம்சத்துடன் அற்புத குழந்தையாக கிருஷ்ணர் காட்சியளித்தார். கார்மேக வண்ணன் கிருஷ்ணர் மஞ்சள் பட்டாடையுடன் ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார். தாயரான தேவகியும் தேவதை போல ஜொலித்தாள்.