கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2020 01:08
மதுரை: மதுரையில் சின்மயா மிஷன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளான நேற்று (ஆக.,9) சின்மயா பாலவிஹார் கலை நிகழ்ச்சிகள் இணையதளம் மூலம் துவங்கின. நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணரின் ஸ்லோகங்கள், புராண கதைகள், பாடல்கள், பகவத் கீதையை அரங்கேற்றினர்.தலைவர் சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியை சின்மயா பாலவிஹார் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இன்று சின்மயா தேவி குழுவினரின்பஜனோத்ஸவம், நாமஸங்கீர்தனம் நிகழ்ச்சி சின்மயா மிஷன் மதுரை என்ற யு டியூப் சேனலில் மாலை 6:30 மணிக்கு நேரடி ஒளிபரப்பாகிறது.