Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் ... கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
09:42

காஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை தெய்வத்தின் அருளாலும் முருகப்பெருமானுடைய அருளாலும், அவ்வையார், தொல்காப்பியர், சமயக்குரவர் நால்வர், ஆழ்வாராதிகள், திருவள்ளுவர் மேலும் பலரால் வளர்க்கப்பட்டது.

தமிழ் சமுதாயம் விவசாயம், கல்வி, ஆராய்ச்சி என பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. நல்ல பண்புகள் மூலம், பக்தியின் மூலம் மனிதர்கள் பாதுகாப்பாகவும், பரம்பரைக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் வாழ வேண்டும்.தமிழில் பக்தியை பெருக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. பலநீதி நுால்கள் இருக்கின்றன. ஏராளமான அறிவியல், மருத்துவ, ஜோதிட தமிழ் பாடல்கள் உள்ளன.

கோயில்களில் சமயக்கல்விமொழி வளர்வதற்கு இலக்கணம் எவ்வளவு முக்கியமோ, அது போன்று மனித நாகரிகம் வளர சமயக்கல்வி அவசியம். எனவே சமயக்கல்வியை, தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் போன்றவற்றை கோயில்கள் மூலம் கற்பிக்க வேண்டும். அதற்கு சட்டத்தின் மூலம் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தேவையான பங்களிப்பை பக்தர்கள் வழங்க வேண்டும்.

பெற்றோர்களும் குழந்தைகளுக்கு சமயக்கல்வியை போதிக்க முயற்சிக்க வேண்டும். ஜெயேந்திரர் ஜெயந்தியன்று ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதையொட்டி குமரி முதல் திருவொற்றியூர் வரை உள்ள பல கோயில்களின் தல புராணங்கள் தொகுத்து நுாலாக வெளியிடப்பட்டுள்ளது.

சமயக்கல்வியை வளர்க்க மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. வெற்றிக்கு தேவை வழிபாடுநம் பண்பாடு இயற்கையை நேசிப்பது, இறைவனை பூஜிப்பது என்ற அடிப்படையிலானது. எனவே குளம், ஏரிக்கரைகளில் இலுப்பம், வில்வம், மரங்களையும், துளசி போன்ற செடிகளையும் நட வேண்டும். பக்தியை வளர்க்க வேண்டும்.

தினசரி பாராயணம் செய்வதற்கும், குறிப்பாக செவ்வாய், சஷ்டி, கிருத்திகை நாட்களில் சொல்லவும் முக்கியமானதாக கந்தசஷ்டி கவசம் உள்ளது.நமது செயல்கள் வெற்றி பெற தினசரி வழிபாடுகள், தீபம் ஏற்றுவது, கோலம் போடுவது, தோரணம் கட்டுவது போன்ற பழக்கங்கள் தேவை.தினமும் கந்த சஷ்டி கவசம் பாடி ஆரோக்கியமாகவும், சுகாதாரம், பொருளாதாரம், தமிழ் பண்பாடு வளரவும் அனைவரும் குமரக்கடவுளை வணங்க வேண்டும்.இவ்வாறு கூறினார். புத்தகங்கள் வெளியீடுகாஞ்சி காமகோடி பீடத்தின் ஹிந்து சமய மன்றம் சார்பில் இளையாத்தங்குடி மகாத்மியம் பால ராமாயணம் தமிழ்நாடு சிவாயலங்கள் குறித்த ஹிந்தி புத்தகம் தல புராணங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் (2 வால்யூம்) ஆகிய ௪ புத்தகங்கள் வெளியிடப்பட்டன.ஸ்ரீசங்கரா கல்லுாரி சார்பில் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி கலந்து கொண்டனர். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நுால்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி மாத ... மேலும்
 
temple
திருப்பதி: திருப்பதி, திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும். இந்த ... மேலும்
 
temple
 வேப்பூர்: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple
டேராடூன்: உத்தரகண்டில், அடுத்த ஆண்டு நடைபெறும், ஹரித்வார் கும்பமேளாவில், கொரோனா பாதிப்பால் பக்தர்கள் ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் ஸ்ரீ வாராகி மந்த்ராலயம் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.