பதிவு செய்த நாள்
16
மே
2012
12:05
மதுரை : சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீதீர்த்த சுவாமிகள், மதுரையில் மே 21 முதல் 31 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதுரை சிருங்கேரி மடம் தர்மாதிகாரி எஸ்.சங்கரநாராயணன், கவுரவ ஏஜன்ட் சீனிவாசராகவன் கூறியதாவது: மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதி சங்கரர் காலத்திலிருந்தே தொடர்பு உண்டு. சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமி, மே 20 ல் மதுரை கொடிமங்கலம் வருகிறார். மே 21 மாலை 5 மணிக்கு மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படும். பின், அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். மே 22 காலை 10 மணிக்கு, 32வது பீடாதிபதி நரசிம்ம பாரதீ சுவாமிக்கு ஆராதனை நடக்கிறது. மே 23 முதல் 26 வரை சதசண்டியாக பாராயணம், 27 ல் யாகம் நடக்கிறது. மே 25 பகல் 11 மணிக்கு சாரதாம்பாளுக்கு, தீர்த்த சுவாமிகளால் வெள்ளி மண்டபம் சமர்ப்பணம் செய்யப்படும். மே 21 மாலை 4.30 க்கு வீணை இசை, 22 முதல் 24 வரை நாம சங்கீர்த்தனம், 25ல் அருளுரை, 26ல் சொற்பொழிவு, 27ல் சங்கீத உபன்யாசம், 28ல் சாக்ஸபோன் இசை, 29 ல் நாராயணீயம் சொற்பொழிவு நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி சிருங்கேரி மடத்தில், மே 30 காலை 9 மணிக்கு மூர்த்திகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடைபெறும். அங்கு, மே 31 காலை 10 மணிக்கு பாத பூஜை நடைபெறும், என்றனர்.