உத்தரகோசமங்கை: கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு 12:00 மணிக்கு கோகுலாஷ்டமி விழா நடந்தது. மூலவர் கண்ணபிரானுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பாலமுருகன், தும்பிக்கையாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலையில் கோபூஜையும், உலக நன்மைக்கான சுதர்ஸன யாகவேள்வியும் நடந்தது.