Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி பகுதியில் மாசிகளரி; பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
05:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.


பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். வரும், 23ம் தேதி  இரவு, 8:00 மணிக்கு அணி எடுப்பு, 24ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் அபிஷேகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும்,25ம் தேதி கரியகாளியம்மன் பண்டிகை பூஜையும், 27ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசி நாள் அபிேஷக பூஜையும் நடக்கிறது. 


மார்ச், 3ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல், 6ம் தேதி வெளிப்பூவோடு ஆரம்பம், இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. 7ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி. பூவோடு வழிபாடு நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல், 11ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு முக்கிய நிகழ்வான முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும், அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேரும் கோவில் வாளகத்தில் இருந்து வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் துவங்குகிறது. வரும், 12ம் தேதி இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டமும், 13ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டத்தை தொடர்ந்து, தேர் நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.  வரும், 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; வரும், 16ம் தேதி மகா அபிேஷக பூஜையுடன் நிறைவடைகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar