ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2020 05:08
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விடுபட்ட விழாக்களை நடத்த வேண்டும் என்று ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால், பங்குனித் தேர் திருவிழாவான ஆதி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 2.30 மணி - ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்றது. 3.45 மணி - 4.15க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. மாலை 4.00 மணி- நம்பெருமாள் நாச்சியார்களுடன் எழுந்தருளி அருள்பாலித்தார். கொரோனா பொது முடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை பக்தர்கள் காண கோயில் இணைய தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.