பரமக்குடி,:போகலுார் ஒன்றியம் மென்னந்தி நாகாச்சி ஊராட்சி அரச நகரி கலைச்செல்வி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் 108 விளக்குகளுடன் பூஜைகளை நடத்தினர். அறங்காவலர் தலைவர்கண்ணன் தலைமை வகித்தார். சுப்பம்மாள் குருந்த லிங்கம் முன்னிலை வகித்தார். பாண்டி மீனாள் வரவேற்றார். அன்னதானம் நடந்தது. காந்தி நன்றி கூறினார்.