பதிவு செய்த நாள்
19
ஆக
2020
01:08
பெ.நா.பாளையம்: கபசுர குடிநீர் பிரசாதமாக வழங்கி, கொரோனாவை விரட்ட, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என, கோவை வடக்கு இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி, இந்து மாதர் மன்றத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம், துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், சரவணம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட, 280 இடங்களில் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து, பக்தர்களுக்கு கபசுர குடிநீர் பிரசாதமாக வழங்கி, கொரோனா நோயை விரட்ட, பிரார்த்தனையுடன் விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம், 22ம் தேதி கொண்டாடப்படும் என, முடிவு செய்யப்பட்டது.