பழநியில் விதை விநாயகர் அறிமுகம்: மாசில்லா சதுர்த்திக்கு வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2020 09:08
பழநி:விநாயகர் சதுர்த்தியையொட்டி மாசு இல்லாமல், தொடர்ந்து பயன்தரும் வகையிலான விதை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆக.22ல் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை நடந்து வருகிறது. பழநியில் இந்தாண்டு காய்கறி விதைகளை பயன்படுத்தி தயாரான விநாயகர் சிலைகள் (தொட்டியுடன்) விற்பனைக்கு வந்துள்ளன. விநாயகரின் தலைப்பகுதில் தக்காளி, அவரைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் விதைகள் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. வீடுகளில் சதுர்த்தி பூஜை முடிந்தபின், தொட்டியில் வைத்து தண்ணீர் விடவேண்டும். இதில் விநாயகர் சிலை கரைந்து விடும். அதில் உள்ள விதைகள் செடி, கொடியாக வளரும். அதனை முறையாக பாராமரித்தால், வீட்டிலேயே காய்கறிகள் கிடைக்கும். சிலை விற்பனை செய்யும் ராமநாதன் கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள் உள்ளன. மாற்று யோசனையாக விநாயகரை குளம், நதிகளில் கரைத்து மாசுபடுத்தாமல் வீட்டிலேயே கரைத்து, தொடர்ந்து பயன்படும் சிலைகளை விற்பனை செய்கிறோம். இவற்றை சேலத்தில் இருந்து வாங்கி வருகிறோம். இதன் விலை ரூ.300, என்றார். தொடர்புக்கு 89256 12312.