தேவகோட்டை,:தேவகோட்டை சகாய அன்னை ஆலய நவநாள் நிறைவு விழா நடந்தது. பங்குதந்தைஜெகன்நாதன் தலைமை வகித்தார். துணைபங்குபணியாளர் ஜேம்ஸ்ராஜ் கொடியேற்றினார். தினமும் திருப்பலிகள் நடந்தன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறப்பு தலைப்புகளில் மறையுரை நடந்தன. திருவிழாவின் நிறைவு நாள் ஆனந்தா கல்லுாரி செயலர் சேசுராஜ் கே.கிறிஸ்டி சிறப்பு திருப்பலி நடத்தினார். சகாய அன்னை ஆலய வளாகத்திற்குள் வலம் வந்தார். கொடியிறக்கத்திற்கு பின் விழா நிறைவு பெற்றது.