Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயிலில் கண்ட இடத்தில் விளக்கேற்ற ... தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றம் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வில்லியனுார் பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

15 மார்
2026
02:03

வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் தொழிலக உரிமையாளரிடம் டிரஸ்டி நிர்வாகிகள் வழங்கினர்.


வில்லியனுாரில் பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.


இக்கோவிலில் ரங்கராஜன் சாரிட்டபிள் டிரஸ்டி சார்பில், தங்கத் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 15 அடி உயரம்; 7 அடி அகலத்தில் மரத்தால் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.


அதனை தொடர்ந்து மரத்தேரில் வாட்டுமானம், நகாஸ் வேலைகள் செப்பு தகடில் செய்வதற்கு கும்பகோணத்தை சேர்ந்த ‘ராஜா சில்பாலயா தொழிலகம்’ சார்பில், ரூ. 27 லட்சம் திட்ட மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


நேற்று தங்கத்தேர் பணிகள் துவங்க முதற்கட்டமாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தொழிலக உரிமையாளர் ராஜகோபாலிடம், டிரஸ்டி கவுரவ தலைவர் ஏகாம்பரம், மேனேஜிங் டிரஸ்டி ஹரிஹரிநமோநாராயணா, நிர்வாகிகள் பிரேம்குமார், கண்ணபிரான், ராமதாஸ், மோகனசுந்தரம், ஜெயமூர்த்தி ஆகியோர் வழங்கினார்.


நிகழ்ச்சியில் பெருமாள், முருகையன், ரமேஷ், வேலவன், விமல்ராஜ் மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar