திருத்தணி: கங்கையம்மன் கோவில், 18ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. திருத்தணி அடுத்த கீழாந்தூர் கங்கையம்மன் கோவில், 18ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10ம் தேதி கங்கா - கங்காதரன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தினமும் மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் சந்தனக்காப்பு அபிஷேகம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. காலை, 8 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தீபாராதனை மூலவர் கங்கை அம்மனுக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு, 7 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டி, அலகு குத்தி டிராக்டரில் அந்தரங்கத்தில் தொங்கியபடி அம்மனை வழிபட்டனர். ஆடல்பாடல் கிர õம வாலிபர்கள், காளியம்மன், பத்ரகாளி போன்று பெண் வேடமிட்டு, ஆடல் பாடலுடன் அம்மன் திருவீதி உலாவில் பங்கேற்றனர்.