Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம்: சொத்து சேரும் கும்பம்: சொத்து சேரும்
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)
மீனம்: சாதிக்கும் காலம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
17:24

ராசிக்கு நான்கில் இருக்கும் ராகு  3ல் மாறுகிறார். அசாத்திய தைரியம் உண்டாகும். பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், முக்கிய முடிவுகளை எடுத்து சாதனை புரிவீர்கள். இக்கட்டான நேரத்தில் கூட உங்கள் நடவடிக்கை வெற்றியில் முடியும்.  மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். ஆபத்து காலத்தில் நண்பர்களுக்கு உதவுவீர்கள். அவ்வப்போது தத்துவ சிந்தனை மனதில் பிறக்கும். பொதுநல சேவை, ஆன்மிகப் பணிகளில் முன்நிற்பீர்கள். எதிரிகள் உங்களோடு மோதி பலம் இழப்பர். கடன் பிரச்னை குறையும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சியால் நன்மை அதிகரிக்கும்.

குடும்பம்: ராகு 3ல் அமர்வதால் சகோதரி வீட்டுப் பிரச்னையை தீர்க்க உதவுவீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. தாயார்வழி உறவினர்களோடு இருந்த பிரச்னை மறையும். தந்தைவழி உறவினர் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.  

தொழில்: தொழிலதிபர்கள் தொழிலாளர்களுடன் நிதான அணுகுமுறையை பின்பற்றுவது நல்லது. ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். காவல், தடயவியல் துறையினர் சாதனை படைப்பர். உங்களின் இயற்கை குணமான நீதி, நேர்மையால் சுற்றியுள்ளவர்களால் பிரச்னை ஏற்படலாம். கேது 9ம் இடத்திற்கு வரவிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு வாய்ப்பு தேடி வரும். சிலர் பணி காரணமாக குடும்பத்தை பிரியும் நிலை வரும். அரசுப் பணியாளர்கள் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திப்பர்.  

நிதி நிலை : பூர்வீக சொத்தில் இழப்பு ஏற்படலாம். ஆனால் சுயவருமானத்தால் சொத்து சேரும். குரு, சனிப்பெயர்ச்சியால் நிதிநிலை உயரும். பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்கள்:  ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். ஞாபக மறதியை போக்க பயிற்சி தேவை. இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பெண்கள் : வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். குடும்ப பிரச்னையை வெளியே சொல்வதால் மதிப்பு குறையும். சகோதரவழியில் பிரச்னை தோன்றலாம். புகுந்த வீட்டு பிரச்னைக்கு கணவரோடு இணைந்து செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.

உடல்நலம்: காது, கழுத்து, தோள்பட்டையில் சிறுபிரச்னைகள் ஏற்படலாம். சிலர் காது, மூக்கு, தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். குருவின் பார்வை ராகு மீது விழுவதால் பிரச்னை குறையும்.

பரிகாரம்:
* தினமும் வராஹியம்மனை வழிபடுதல்
* வெள்ளியன்று அபிராமிஅந்தாதி படித்தல்
* ஏழைகளுக்கு அன்னம், ஆடை தானம்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) »
temple
ராசிக்கு 2ம் இடம் வரும் ராகுவால் லாபம், எட்டில் இணையும் கேதுவால் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். இதுவரை ... மேலும்
 
temple
ராகு, கேதுவால் சரிசம பங்கு பலன் கிடைக்கும். வாழ்வில் பல மாறுதல் ஏற்படும். 2ம் இடத்தில் இருந்த ராகு ... மேலும்
 
temple
செப்.1 முதல் ராகு 12ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராசியில் இருந்து ராகு விலகுவது நிம்மதி தரும். இதுவரை ... மேலும்
 
temple
செப். 1 முதல் ராகு கேதுப் பெயர்ச்சியால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 11ம் இடத்தில் ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்
 
temple
ராசிக்கு 11ல் இருந்த ராகு செப்1 முதல் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் பணிச்சுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.