இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. அதாவது ராகு உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம்.
கேது இதுவரை 8ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7ம் இடமான துலாமிற்கு செல்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடுபலன் நடக்காது. 7ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்னை வரலாம். அலைச்சல் ஏற்படும். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரியால் பிரச்னை வரலாம். உடல்நிலை சுமாராக இருக்கும். இரண்டு கிரகங்களும் சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலை கொள்ள தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். செலவு அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. சற்று ஒதுங்கி இருக்கவும். 2023 மார்ச் 29க்கு பிறகு குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. தொழில்: புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு 10 முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பொருள் விரயம் ஏற்படும். வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும்.சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இருப்பிட மாற்றம் ஏற்படலாம். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். இருப்பினும் இந்தகால கட்டத்தில் ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். நிதி நெருக்கடி ஏற்படாது. 2023 மார்ச் 29க்கு பிறகு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பங்கு வர்த்தகம் கூடுதல் லாபத்தை தரும். பணியாளர்கள்: இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர். மாணவர்கள்: சுமாரான பலன் கிடைக்கும். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். அதிக முதலீடு தேவைப்படும் பணப்பயிர்களை பயிரிட வேண்டாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு லாபத்தில் குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உடல்நலம்: மனதில் அவ்வப்போது பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். பரிகாரம்: வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு உறுதுணையாக இருக்கும். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியைச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.
பரணி: எதிரியால் தொல்லை
ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. அதாவது ராகு உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது இதுவரை 8ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்தது போல் கெடுபலன் நடக்காது. 7ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்னை வரலாம். அலைச்சல் ஏற்படும். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரியால் பிரச்னை வரலாம். உடல்நிலை சுமாராக இருக்கும். இரண்டு கிரகங்களும் சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலை கொள்ளத் தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். கணவன், மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். சிலருக்கு துாரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்திகள் வரலாம். 2023 மார்ச் 29க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம். எடுத்த காரியத்தை துரிதமாக முடிப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கவுரவம் மேம்படும். விலகிய சொந்தங்கள் விரும்பி வரும். புதிய உறவினர்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதிய வீடு, சொத்து போன்றவை வாங்க யோகமுண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புண்ணியத்தலங்களுக்கு சென்று வரலாம். ஞானிகளின் ஆசியும், ஆதரவும் குடும்பத்துக்கு கிடைக்கும். தொழில், வியாபாரம்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். ராகுவின் பார்வை பலமாக இருப்பதால் பணவிஷயத்தில் கஷ்டம் உண்டாகாது. எதிரிகளின் இடையூறு அவ்வப்போது குறுக்கிடும். ஆனால் அதை முறியடித்து இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விடுவீர்கள். பணியாளர்கள்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் பொறுமையுடன், விட்டுக் கொடுத்து போகவும். அரசு ஊழியர்களுக்கு ஆற்றல் மேம்படுவதன் மூலம் நல்ல பதவி கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. வருமானத்திற்கு குறை இருக்காது. 2023 ஏப். 22க்கு பிறகு செல்வாக்கு, பெருமையுடன் செயல்படுவீர்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள்: பதவியை எதிர்பார்க்காமல் பொதுநலத்துடன் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு சுமாராகவே இருக்கும். சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.2023 ஏப். 22 க்கு பிறகு குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பாடங்கள் எளிதில் புரியும். விவசாயிகள்: நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். 2023 மார்ச் 29க்கு பிறகு புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள்: திருப்திகரமாக செயல்படுவர். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். 2023 ஏப். 22க்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன், பொருள் வந்து சேரும். உடல்நலம்: சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர். 2023 ஏப். 22க்கு பிறகு சிறப்பான வாழ்வு அமையும். மருத்துவச் செலவு குறையும். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வணங்கலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.
கார்த்திகை 1-ம் பாதம்: உடல்நிலையில் அதிருப்தி
இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. அதாவது ராகு உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது இதுவரை 8ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடுபலன் நடக்காது. 7ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்னை வரலாம். அலைச்சல் ஏற்படும். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரியால் பிரச்னை வரலாம். உடல்நிலை சுமாராக இருக்கும். இரண்டு கிரகங்களும் சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலை கொள்ள தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். !பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதப்படலாம். உறவினர்கள் வகையில் சுமாரான நிலையே உள்ளது. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அல்லது அவர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். 2023 ஏப்.22க்கு பிறகு குரு பார்வை நன்மை தரும் இடத்தில் இருப்பதால் அதன் மூலம் பல்வேறு காரியங்களை சாதிக்கலாம். இதனால் எந்த இடையூறையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். தொழில்: புதிய தொழில் தொடங்க அதிக முதலீடு போட வேண்டாம். பணமுதலீட்டைவிட அறிவை முதலீடாக்கி தொழில் ஆரம்பிப்பது நல்லது. 2023 மார்ச் 29க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். பணியாளர்கள்: அனுகூலங்கள் இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. 2023 ஏப். 22க்கு பிறகு முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு காண்பர். சிலருக்கு இடமாற்றம் வரலாம். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.
கலைஞர்கள்: விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள்: சீரான நிலையில் இருப்பர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிது. 2023 ஏப். 22க்கு பிறகு சிறப்பான பலன் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கல்வி ஊக்கத்தொகை கிடைக்கும். விவசாயிகள்: பாசிபயறு,நெல், கொண்டைக்கடலை, மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். 2023 ஏப். 22க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்கள்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு உற்சாகம் பிறக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. உடல் நலம் மேம்படும். பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராகுகாலத்தில் துர்கையை வழிபடுங்கள். நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கும் சென்று வாருங்கள்.
மேலும்
ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »