பதிவு செய்த நாள்
23
ஆக
2020
03:08
ராகு, கேது ஆகிய இந்த இருவரையும் ‘ச்சாயா கிரஹம்’ என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதன் நேரடி மொழிபெயர்ப்பாக தமிழில் இவற்றை நிழல் கிரஹங்கள் என்று அழைக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பழங்காலத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத ஜோதிட நூல்களில் இந்த இருவரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை. உண்மைக்கோள்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இந்த ஏழினைப் பற்றி மட்டுமே ஜோதிட நூல்கள் பேசுகின்றன.
கிரஹணங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும், வேத மந்திரங்களின் அடிப்படையிலும் பின் நாளில் ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்கள் இருப்பதாக ஜோதிட அறிஞர்கள் நம்பத் தொடங்கினர். இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைசூழ்ந்த மண்டலமாக தென்பட்டதால் (தூம்ர வர்ணம்) நிழலாக பாவித்தனர். இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல, புகை மண்டலமான நிலப்பரப்பற்ற நிழற்கோள்கள் என்று அறிவித்தனர்.
நிழல் என்பது ஒரு ஒளி மண்டலத்தில் ஏதோ ஒரு பொருள் குறிக்கிடுவதால் அந்த ஒளியானது மறைக்கப்பட்டு உருவாகின்ற கருமையான பிம்பம் ஆகும். ஆனால் இந்த இரண்டும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதே போன்று நிழல் என்பது அது சார்ந்த பொருளை பின்தொடர்ந்து வருவது. ஆனால் இவை இரண்டும் யாரையும் பின்தொடர்வது இல்லை. உண்மையில் இவை இரண்டும் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டலமான பகுதிகள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இங்கே நமக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஒரே இடத்தில் நிற்கக் கூடிய புள்ளிகள் என்றால் பிறகு ராகு&கேது பெயர்ச்சி என்பது பொய்யா, இன்ன ராசியிலிருந்து இன்ன ராசிக்கு இடம்பெயர்கிறார்கள் என்று சொல்கிறார்களே அது தவறா என்ற கேள்வி எழலாம். இதே கேள்வி சூரியனுக்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாக சூரியன் என்பது ஒரு மிகப்பெரிய விண்மீன் என்று பாடத்தில் படிக்கிறோம். அது ஒரே இடத்தில் நின்று சுழன்று கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம் என்றும் படிக்கிறோம். ஆனால் மாதா மாதம் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. அப்படியென்றால் இதில் எது உண்மை என்ற ஐயம் நமக்கு உதிக்கிறது.
உண்மையில் நாம் படிக்கின்ற இந்த சூரியக்குடும்பம் அமைந்துள்ள இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்துப் பார்க்கிறோம். இந்த அண்டம் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தின் மத்தியில் சூரியன் உள்ளதால் இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இடம் பிடிக்கிறது. ராகு, கேது ஆகிய இந்த இரண்டும் தொலைதூரத்தில் ஒரே இடத்தில் நிற்கின்ற வெட்டும் புள்ளிகள் என்பதாலும், சுழலுகின்ற இந்த அண்டத்தினூடே நமது பூமியும் சுற்றி வருவதாலும் பூமியின் வசிக்கின்ற நம் கண்களுக்கு அவை பின்நோக்கி செல்வதாக தென்படுகிறது. ஓடுகின்ற ரயிலில் பயணிக்கின்ற நம் கண்களுக்கு அருகில் நிற்கின்ற இரயில் பின்நோக்கி செல்வதாகத் தோன்றுகிறது அல்லவா.. அது போலத்தான் இதுவும். ராகு&கேது வக்ர கதியில் அதாவது வலமிருந்து இடமாக பின்நோக்கி சுற்றுவதாக நம் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அண்டமும் சுழலுவதால் அந்தந்த காலக்கட்டத்தில் எந்த ராசி மண்டலம் இந்த புள்ளிகளுக்கு நேராக வருகிறதோ, அதில் இந்த நிழற்கோள்கள் வந்து அமர்வதாக நாம் கணக்கில் கொண்டு பலன் காண்கிறோம்.
ராகுவை ஆங்கிலத்தில் கிsநீமீஸீபீவீஸீரீ ழிஷீபீமீ என்றும் கேதுவை ஞிமீsநீமீஸீபீவீஸீரீ ழிஷீபீமீஎன்றும் அழைப்பார்கள். அதாவது ராகு தான் அமர்ந்திருக்கும் பாவகத்தின் தன்மையைக் கூட்டும் திறன் படைத்தவர். வேதியியலில் வினை ஊக்கி (நீணீtணீறீஹ்st) என்று சொல்வார்கள். ராகு தான் இணைந்திருக்கின்ற கோளின் தன்மையையும், அமர்ந்திருக்கின்ற பாவகத்தின் தன்மையையும் வெகுவாக உயர்த்தி பலன் தரும் ஆற்றல் கொண்டவர்.
கேது தான் இருக்கும் இடத்தின் பலத்தை வெகுவாக குறைப்பார். லக்னத்தில் கேது அமையப் பெற்றவர்கள் தன்னை முன்னிலைப் படுத்த விரும்ப மாட்டார்கள். எல்லாவற்றிலும் ஒருவிதமான தயக்கம் அவர்களுக்குள் இருக்கும். எங்கே தான் செய்வது தவறாகிவிடுமோ, தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கம் அதிகமாக இருக்கும். எந்த பாவகத்தில் கேது சென்று அமர்கிறாரோ அந்த பாவகத்தின் வீரியத்தன்மையை குறைக்கும் தன்மையை கேது தருவார்.