அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைப்பட்டுக் கிடந்த நீக்ரோ மக்களின் நலனுக்காக பாடுபட்டார். விலைக்கு அடிமைகளை வாங்குவதை தடுக்க சட்டம் இயற்றினார். இதனால் தீயவன் ஒருவனின் குண்டுக்கு லிங்கன் பலியாக நேர்ந்தது. அவரது சடலம் எலினா என்னும் அவரது சொந்த ஊருக்கு திறந்த வண்டியில் கொண்டு வரப்பட்டது. வழியெங்கும் மக்கள் திரளாக நின்று தங்களின் தலைவருக்கு கண்ணீரை காணிக்கையாக்கினர். வழியில் நின்ற ஏழை நீக்ரோ பெண், தன் மகனை கைகளால் மேலே துாக்கி காட்டியபடி ‘‘நன்றாக பாரடா! இந்த தலைவர் நமக்காக இன்னுயிர் கொடுத்தவர்’’ என்று கதறினாள். எளியவர் மீது இரக்கப்பட்டு உதவி செய்கிறவர்கள் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்கள். அன்பின் ஆலயமாகத் திகழ்ந்த ஆப்ரகாம் லிங்கனும் அந்த மாமனிதர்களில் ஒருவராக இருக்கிறார்.