லாரன்ஸ் என்னும் ஆராய்ச்சியாளர் பறவைகள் பேசும் மொழியை அறியும் திறன் பெற்றிருந்தார். வாத்து பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், ஒருமுறை வாத்து முட்டைகளை இயந்திரத்தில் வைத்து குஞ்சு பொறிக்கச் செய்தார். தாய் இல்லாத குஞ்சுகளை அன்புடன் வளர்த்தார். தன் உடலைத் தாழ்த்தி மெதுவாக நடந்தபடி தாய் வாத்து போல அடிக்கடி குரல் எழுப்பி மகிழ்வார். குஞ்சுகளும் அவரை பின்தொடர்ந்து நடக்கும். தாய் இல்லாத குஞ்சுகளிடம் நேசம் காட்ட லாரன்ஸ் தன் நிலை மறந்து வாத்து நிலைக்கு தாழ்த்திக் கொண்டார். இது போல ஆண்டவரும் நம்மை மீட்கவே மனிதனாக பிறந்து உயிரை அர்ப்பணித்தார்.