உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. திருப்பணி செய்யப்பட்டு, 2018ல் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று இரு ஆண்டு பூர்த்தியானதை முன்னிட்டு கோயிலில் மூலவர்களுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. உலக நன்மைக்கான யாகவேள்வி செய்யப்பட்டு, புனித நீரை, சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது தெளித்தனர். பூஜைகளை மீனாட்சி சுந்தர குருக்கள், அன்புமாறன் செய்திருந்தனர். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ஆர்.வசவலிங்கம் செய்திருந்தார்.