Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடும்பு சுப்பிரமணிய சுவாமி ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூச தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் தைப்பூச தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் தைப்பூச தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
10:02

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், தைப்பூசத் தேரோட்டம் நடந்தது.


சிறுமுகை அருகே பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோயில் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பாலசுப்பிரமணியர் திருமணக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 5:30 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவசங்கரி மற்றும் சிறுமுகை உட்பட ஏழு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், விழா கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.


அதேபோன்று மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தனசேகர் குருக்கள் தலைமையில் கண்ணன் குருக்கள் தேர் முன்பு சிறப்பு பூஜை செய்தார். பின்பு மாலை, 4:25 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, என, கோஷம் போட்டு இழுத்து சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகவும், ஊட்டி சாலை, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக, மீண்டும் கோயிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar