நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2020 03:08
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை நடந்தது. நாமகிரிப்பேட்டை, கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.