பழநி:பழநி
முருகன் கோயில் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று (ஆக.,28)
நடைபெறவிருந்த ஆவணி மூல புட்டுக்கு மண் சுமந்த திருவிழா ரத்து
செய்யப்பட்டுள்ளது. இதேபோல பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில்
இன்று முதல் செப்.,7 வரை நடைபெற இருந்த ஆவணி பிரமோற்ஸவ விழாவும் ரத்து
செய்யப்படுகிறது. கோயிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகமவிதிகளுக்கு
உட்பட்டு உரிய நேரங்களில் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.