ஒருமுறை வானுலகம் சென்ற போது சிலர் கூட்டமாக கூடி நிற்பதைக் கண்டார் நாயகம். அவர்களது வயிறு கண்ணாடி போல காட்சியளித்தது. அதற்குள் ஏராளமான பாம்புகள் வளைந்தபடி இருந்தன. அங்கிருந்த வான துாதரிடம் காரணம் கேட்டார். “ பிறரிடம் வட்டி வாங்கும் பாவத்தொழில் நடத்தியவர்கள் இவர்கள்” என பதில் கிடைத்தது. கிடைத்த வட்டி பணத்தில் பூமியில் வேண்டுமானால் சுக வாழ்வு வாழலாம். ஆனால் இறந்த பிறகு, வட்டி கட்டியவரின் வயிற்றெரிச்சல் பாம்புகளாய் மாறி வயிற்றில் குடியேறும் என்பதை மறக்க வேண்டாம்.