உறவினரோ, நண்பரோ நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கலாம். அவரை சந்திக்கும் போது, “இப்படித்தான் எங்க மாமாவுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு! ஆஸ்பத்திரியில் சேர்த்த அடுத்த நிமிடமே இறந்துட்டாரு,” என பயமுறுத்தும் வகையில் பேசுவது, “இந்த நோய் குணமாகுறது ரொம்ப கஷ்டமாச்சே, இதுக்கு மருந்தே கிடையாதுன்னு சொல்றாங்களே,” என்று அவநம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசக் கூடாது. நோயாளி விரும்பினால் அவருடன் பேசலாம். இல்லாவிட்டால் நலம் விசாரித்து விட்டு, விரைவில் குணமடைய விரும்புவதாகச் சொல்லி விட்டு வர வேண்டும். நோயாளியை நலம் விசாரிக்க செல்லும்போது, கூச்சல் போடாமல் இருப்பதும், நோயாளியின் அருகில் சிறிது நேரமே உட்காருவதும் சிறந்த நடைமுறை என்கிறார் நாயகம்.