தப்பு செய்யக் கூடாது. தவறி செய்யும் நிலை வந்தால் மன்னிக்கும்படி வழிபட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதில் இருந்து விடுபடலாம். அபூஅமர் நுஜைத்துவின் ஆசான் ஹளரத் அபூ உத்மான் ஹீரீ. ஒருமுறை, ஆசானிடம் சென்ற அபூஅமர் அவரது முன்னிலையில், ‘‘என் பாவங்களை மன்னிக்க வேண்டும். இனி தப்பு செய்யமாட்டேன்’’ என உறுதி எடுத்தார். ஆனால் சில மாதம் கழிந்த பின் தவறு செய்ய நேர்ந்தது. வாக்கை மீறியதால் மனசாட்சி உறுத்தியது. அதன்பின் ஒருமுறை ஆசானை பார்த்த போது வெட்கி தலைகுனிந்தார். ‘‘நீங்கள் பாவம் செய்வதாக இருந்தால் உங்களின் பகைவர்களுக்கு தெரியாமல் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் நீங்கள் செய்யும் பாவங்களை அவர்கள் பகிரங்கப்படுத்தி மகிழ்வர். எப்போதாவது பாவம் செய்தால் என்னிடம் வாருங்கள். ஏனெனில் நீங்கள் எந்த சூழலில் பாவம் செய்தீர்களோ அதைப் புரிந்து கொள்ளும் சக்தி எனக்கு இருக்கிறது’’ என மன்னிப்பு வழங்கினார். ஆசானின் ஆறுதல் பேச்சைக் கேட்ட பின் அபூஅமர் அமைதி அடைந்தார்.