‘‘சொந்தக் காரணங்களுக்காக நீங்கள் கண்ணீர் விட்டால் அது உங்களுடைய பலவீனம். ஆனால், மற்றவர் மீது அன்பு கூர்ந்து அவர்களுக்காக கண்ணீர் விட்டால் அது உங்களின் பலம். மற்றவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்பைக் கொண்டே உங்களை அளவீடு செய்ய முடியும்’’ என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். மற்றவர்கள் மீதுள்ள அன்புக்காக ஆண்டவர் ரத்தம் சிந்தினார். அதைப் போல பிறருக்காக உயிரைக் கொடுக்கும் தியாக உள்ளத்தில் இருப்பதே உண்மை அன்பு. அப்படிப்பட்டவர்களே பலம் மிக்கவர்கள்.