இஸ்ரேலின் அரசர் தாவீது. இவரது தந்தை ஈசாய். இவருக்கு எட்டு ஏழு பிள்ளைகள் இருந்தனர். அதில் ஏழு பிள்ளைகளை கவனித்துக் கொண்ட ஈசாய், கடைக்குட்டியான தாவீதுவிடம் மட்டும் அன்பு காட்டவில்லை. சிறுவனாக இருந்தபோதே ஆடுகளை மேய்த்து வர அனுப்பினார். ஊரை விட்டு தள்ளியுள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்க்க வேண்டும். அங்கேயே கூடாரம் அமைத்து தங்கினார். இதனால், அவருக்கு ஆடுகள் மட்டுமே உறவாயின. தன் அன்பையெல்லாம் அவற்றின் மீது பொழிந்தார். ஆண்டவருக்கு இச்செயல் மிகவும் பிடித்தது. தாவீதை இஸ்ரேலின் ராஜாவாக்க எண்ணினார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை ஈசாயின் வீட்டுக்கு அனுப்பினார். அவரது பிள்ளைகளில் ஒருவரை ராஜாவாக நியமிக்க உத்தரவு இருப்பதாக ஈசாயிடம் தெரிவித்தார். ஏழு பிள்ளைகளயும் வரிசையாக நிறுத்தினார். அப்போதும் தாவீதுவை வரவழைக்கவில்லை. எட்டாவது மகன் வராவிட்டால், உங்கள் வீட்டில் சாப்பிடமாட்டேன் என சாமுவேல் சொன்ன பிறகு, வேண்டா வெறுப்பாக தாவீது வரவழைக்கப்பட்டான். ஆனால் ஆண்டவர் அவனையே ராஜாவாக தேர்ந்தெடுக்கச் செய்தார். பிள்ளைகளில் மட்டுமல்ல... யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நாம் நடத்த வேண்டும்.