பிரசங்க கூட்டத்தில் ஒரு பெண் திடீரென அழ ஆரம்பித்தார். பிரசங்கம் செய்தவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “அம்மா! பிரசங்கம் கேட்டு அழுதீர்களே! என் பேச்சு அந்தளவுக்கு உருக்கமாக இருந்ததோ” என்றார் பெருமை பொங்க! அப்பெண்,‘‘போங்க சார் நீங்க வேற! நீங்க முகத்தை திருப்பித் திருப்பி பேசும் போது தாடி அங்குமிங்கும் போகுது. அதைப் பார்த்ததும் காணாமல் போன என் ஆட்டின் ஞாபகம் வந்துடுச்சு! என் ஆட்டுக்கும் உங்களைப் போலவே தாடி இருக்கும். அதுவும் உங்களைப் போலவே தலையாட்டும். அந்த நினைப்புல தான் அழுதுட்டேன்’’ என்றார். இதைக் கேட்டு மனம் நொந்தார் பிரசங்கம் செய்தவர். விதை மட்டும் போதாது. பயிரிடுவதற்கு நிலமும் நல்லதாக இருக்க வேண்டும்.